இலங்கையில் பெரும் இழப்புகளை ஏற்படுத்த சிரியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆபத்தான இரசாயனம்!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

சிரியாவில் பயன்படுத்தும் மிகவும் அபாயகரமான இரசாயனம் உயிர்த ஞாயிறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து தற்கொலை தாக்குதலின் போதும் ஐஸ் பயங்கரவாதிகள் இந்த இரசாயனத்தை பயன்படுத்தியே வெடிகுண்டை பயன்படுத்தியுள்ளனர் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

யுத்தம் இடம்பெற்ற காலங்களில் விடுதலைப் புலிகள் கூட, பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடிய இவ்வாறான மோசமான இரசாயங்களை பயன்படுத்தவில்லை என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம்ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதிக சக்திவாய்ந்த சீ4 போன்ற இரசாயனம் இந்த குண்டுக்காக பயன்படுத்தியிருந்தால் வெடிப்பில் ஏற்படும் அழுத்தத்தை அதிகரிப்பதற்கு அதில் 20 கிலோக்குவும் அதிகமாக பயன்படுத்த வேண்டும்.

சஹ்ரான் ஹஷீம் உட்பட குழுவினர் தங்கள் பயணிக்கும் போது பையினுள் இலகுவாக குண்டுகளை கொண்டு செல்வதற்கு காரணம் இந்த அதிக சக்திவாய்ந்த பொருள் சேர்க்கப்பட்டமையே என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அதிக சக்தி வாய்ந்த இராசாயனம் பயன்படுத்தமையினாலேயே, விசேடமாக கட்டுவப்பிட்டிய தேவாலயத்திலும், ஷங்கிரிலா ஹோட்டலிலும் அதிக பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

தற்போது இந்த இரசாயன பொருள் சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் மாத்திரமே பயன்படுத்துவதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.