வெள்ளவத்தை உள்ளிட்ட பல பகுதிகளில் நாளையதினம் தாக்குதல் நடத்தப்படுமா? பாதுகாப்பு தரப்பு வெளியிட்ட தகவல்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொழும்பின் பல பகுதியில் நாளையதினம் தாக்குதல் நடத்தப்படலாம் என வெளியாகும் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை என பாதுகாப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

போலியான தகவல்களை வெளியிட்டு மக்களை அச்சப்படுத்த வேண்டாம் என கேட்டுள்ளனர். அவ்வாறான எதுவும் தாக்குதல் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் பாதுகாப்பு தரப்பினரிடம் தெரிவிக்குமாறு, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் ஷாந்த கொட்டேகொட தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்தப்படலாம் என தகவலை நிராகரிக்கவில்லை அது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.

எனினும் மக்களை அச்சப்படுத்தாமல் கிடைக்கும் தகவல்கள் பாதுகாப்பு பிரிவிடம் வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தாக்குதல் தொடர்பான தகவலை புலனாய்வு பிரிவினர் இன்னும் தகவலை உறுதி செய்யவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குனசேகர தெரிவித்துள்ளார்.

உறுதி செய்யப்படாத தகவல்கள் பரவுகின்றன. இதுவொரு உறுதி செய்யப்படாத தகவல். இதனை குறித்து அச்சப்பட வேண்டாம்.

அவசியமான அனைத்து பாதுகாப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு அருகிலும் அவசியமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் அச்சமின்றி நாளாந்த செயற்படுமாறு வேலைளை செய்யுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers