பயங்கரவாத ஊடுருவல் பூரணமாக தடுக்கப்படவில்லை: அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தகவல்

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

நாட்டில் இன்னமும் பயங்கரவாத ஊடுருவல் பூரணமாக தடுக்கப்படவில்லை என அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டுக் கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில்

நாட்டில் பலர் இன்னமும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டு உள்ளனர் என்ற தகவல் எமக்கு கிடைத்துள்ளது.

ஆகவே அது குறித்து தேடுதல் பணிகள் பாதுகாப்பு படைகளினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பயங்கரவாத ஊடுருவல் இன்னமும் பூரணமாக தடுக்கப்படவில்லை.

அதேபோல் கைதுசெய்யப்பட்டவர்களின் விசாரணைகளின் போது குற்றங்களுடன் தொடர்பில் இல்லாத நபர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers