தமிழீழ விடுதலை புலிகளிடத்தில் இருந்து வேறுபட்டது ஐ.எஸ்...! ரணில்

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

ஐ.எஸ் அமைப்பு தமிழீழ விடுதலை புலிகளிடத்தில் இருந்து வேறுபட்டது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி - மல்வல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது பேசிய அவர்,

ஐ.எஸ் அமைப்பு தமிழீழ விடுதலை புலிகளிடத்தில் இருந்து வேறுபட்டது. ஐ.எஸ் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான உயிர்களை காவு கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் முதல் இலக்காகும்.

அதனை தொடர்ந்து நாட்டின் நல்லிணக்கத்தையும் அமைதியையும் சீர்குலைப்பது அவர்களின் இரண்டாவது இலக்காகவுள்ளது. மூன்றாவதாக நாட்டின் பொருளதார வளச்சி மற்றும் அபிவிருத்தி என்பவற்றை சிதைப்பதே அவர்களின் நோக்கமாகும்.

நாட்டின் அபிவிருத்தி, பொருளாதார முன்னேற்றம் என்பவற்றை சிதைப்பதற்கு, ஐ.எஸ்.அமைப்பினருக்கு இடமளிக்கமுடியாது. அனைவரும் இணைந்து அவர்களின் இந்த நோக்கத்தை சிதைப்பதற்கு ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று தெரிிவித்துள்ளார்.

Latest Offers