பரபரப்பான நேரத்தில் நாட்டிலிருந்து வெளியேறினார் ஜனாதிபதி மைத்திரி!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

பரபரப்பான நேரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்காக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக ஜனாதிபதி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இன்று காலை 7.35 மணியளவில் ஜனாதிபதி உட்பட குழுவினர் சிங்கப்பூர் நோக்கி சென்றுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 302 விமானம் ஊடாக ஜனாதிபதி உட்பட குழுவினர் பயணம் செய்துள்ளனர்.

ஜனாதிபதியுடன் 27 பேர் சென்றுள்ளதாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.