நேற்றிரவு வன்முறைகள் ஏற்பட்ட பகுதிகளின் தற்போதைய நிலை..

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

சிலாபம் மற்றும் குளியாப்பிட்டி பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை அடுத்து அந்தப் பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மா அதிபருக்கு வழங்கிய உத்தரவுக்கு அமைய பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சிலாபம் மற்றும் குளியாப்பிட்டி பகுதியில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அங்கு இயல்பு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குளியாப்பிட்டியின் பல பகுதிகளில் பள்ளிவாசல்கள், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் என்பன் நேற்றிரவு அடித்து நொறுக்கப்பட்டன.

இதனையடுத்து உடனடியாக பொலிஸ் மற்றும் இராணுவம் அங்கு அழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் 3 பேரை பொலிசார் கைது செய்தனர்.

எனினும் அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி பொலிஸ் நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுமியுள்ளனர்.

இரவு முழுவதும் இந்த நிலை தொடர்ந்தமையினால் அந்தப் பகுதியில் அசாதாரண சூழல் ஏற்பட்டது.

இதனையடுத்து ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு நிலைமைகளை கேட்டறிந்ததுடன் சட்டத்தையும் ஒழுங்கையும் கடுமையாக நிலை நாட்டுமாறும் பணிப்புரை விடுத்தார்.