இலங்கையில் விசா பெறும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கையில் வதிவிட விசா பெற்றுக்கொள்ள அரச புலனாய்வு பிரிவினரிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

எந்வொரு வெளிநாட்டவர்களுக்கும் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க புலனாய்வு பிரிவின் அனுமதியின் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்கமைய வதிவிட விசா பெற்றுக் கொள்ள முடியும்.

இலங்கையில் வதிவிட விசா பெற்றுள்ள மாலைத்தீவு பிரஜைகள் எதிர்வரும் காலங்களில் புலனாய்வு பிரிவில் அனுமதி பெற்றுக் கொள்ள நேரிடும்.

முஸ்லிம் மத விவகார அமைச்சின் அனுமதியின் கீழ் மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக பாகிஸ்தான், எகிப்து, பங்களாதேஷ், ஈரான் மற்றும் சவுதி அரேபிய நாட்டவர்கள் 200க்கும் அதிகமானோர் வதிவிட விசா பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பாதுகாப்பை தீவிரப்படுத்தவும், அடிப்படைவாதம் கற்பிப்பவர்கள் இலங்கை வருவதனை தடுக்கும் நோக்கிலும் அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.