நாட்டை ஆட்டிப்படைக்கும் பயங்கரவாதம்! புதிய அமைப்பின் அவசியத்தை வலியுறுத்தும் சம்பிக்க

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

தற்போது நாட்டில் நிலவிவரும் பாதுகாப்பு அச்சுறுத்தலான நிலையில் பயங்கரவாதமற்ற தேசத்தை கட்டியெழுப்ப புதிய அமைப்பு ஒன்று உருவாக்க வேண்டியுள்ளது என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் அமைச்சர் பதவியை துறக்கவுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ள அமைச்சர்,

அரசாங்கத்தில் இருந்து வெளியேறவோ அல்லது அமைச்சை துறக்கவோ எந்த தீர்மானமும் எடுக்கவில்லை. எனினும் சில விசேடமான திட்டங்களை வகுத்து அதற்கமைய ஒரு இயக்கமாக உருவாகும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

தற்போது நாட்டில் நிலவிவரும் பாதுகாப்பு அச்சுறுத்தலான நிலையில் பயங்கரவாதமற்ற தேசத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது. அதற்கான புதிய அமைப்பு ஒன்று உருவாக்க வேண்டியுள்ளது.

இது அரசியல் மாற்றத்தை உருவாக்க ஏற்படுத்தும் கூட்டணி அல்ல. பயங்கரவாதமற்ற நாட்டினை கட்டியெழுப்ப அணிதிரளும் அனைவருக்கும் தேசத்திற்கான வழி என்ற இந்த மக்கள் இயக்கத்தில் இணைந்துகொள்ள முடியும். அதேபோல் இந்த செயற்பாடுகளை தடுக்கும் அனைவரையும் அரசியலில் இருந்து ஓரங்கட்டும் நடவடிக்கையும் முன்னெடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.