வவுனியாவில் வாள்கள் இரண்டுடன் வர்த்தகர் கைது

Report Print Thileepan Thileepan in பாதுகாப்பு

வவுனியாவில் இரண்டு வாள்களுடன் வர்த்தகர் ஓருவர் கைது இன்று மாலை செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள ஹாட்வெயார் ஒன்று இராணுவத்தினரால் இரண்டு மணித்தியாலம் சோதனையிடப்பட்டது. இதன்போது குறித்த ஹொட்வெயாரில் இருந்து இரண்டு வாள்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டது. இதனையடுத்து குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers