நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை! கண்ட இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்படும்! இராணுவ தளபதி எச்சரிக்கை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கையில் ஏற்பட்ட பதற்றமான நிலையை அடுத்து இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடமேல் மாகாணத்தின் பல பகுதிகளில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

அந்த பகுதியில் சுற்றி திரியும் சிலராலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார், அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் குறித்த பகுதிகளுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

அத்துடன் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நேரத்தில் அல்லது ஏனைய நேரங்களில் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எவராவது செயற்பட்டால் சட்டம் முழுமையாக செயற்படுத்தப்படும். வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக இராணுவத்தினரின் அதிகாரம் முழுமையாக பிரயோகிக்கப்படும்.

சட்டத்தை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேவை ஏற்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தவும் தயங்கப் போவதில்லை.

சில இளைஞர்கள் குடி போதையில் மோட்டார் சைக்கிள்களில் ரோந்து சென்று இவ்வாறு சில சில இடங்களில் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் உத்தரவுகளையும் படையினரின் உத்தரவுகளையும் மீறிச் செயற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேவை ஏற்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தவும் தயங்கப் போவதில்லை எனவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஆதரவு வழங்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers