அசாதாரண சூழ்நிலையில்... முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் பொலிஸார் விதித்துள்ள தடை

Report Print Mohan Mohan in பாதுகாப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை செயற்பாட்டு குழுக்களின் தலைமையில்; அனுஸ்டிப்பதற்கு முல்லைத்தீவு பொலிஸார் தடைவிதித்துள்ளனர்.

இம்மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் பகுதியில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்காக ஒவ்வொறு ஆண்டிலும் மே 18 ஆம் திகதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குழுக்களின் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை அனுஸ்டிப்பதற்கு பொலிஸார் தற்காலிகமாக தடைவிதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை பொதுமக்கள் அனுஸ்டிப்பதற்கு தடை ஏதுமில்லை என பொலிஸாரும் இராணுவத்தினரும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers