ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து கொழும்பில் பெருமளவான படையினர் குவிப்பு!

Report Print Murali Murali in பாதுகாப்பு

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பு நகரில் பெருமளவான படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்குளி உள்ளிட்ட கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் இராணுவத்தினர் துருப்புக்காவி கவசவாகனங்கள், இயந்திரத் துப்பாக்கிகளுடன் ரோந்துக் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், இராணுவத்தின் சிறப்புப் படையின் உந்துருளிப் படையணியும் தீவிரமான ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

வழக்கத்துக்கு மாறாக அதிகளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை தொடக்கம், வாகனங்கள் அனைத்தும் மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டு வருகின்றன.

இதனால் கொழும்பு நகரில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.