சகல பொலிஸ் நிலையங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

Report Print Murali Murali in பாதுகாப்பு

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை அடுத்து, அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட அறிவித்தல் ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அசாதாரண நிலையை கட்டுப்படுத்த சட்டத்திற்கு உட்பட்ட வகையில், அதிகப்பட்ச பலத்தை பிரயோகிக்க அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலையடுத்து, நாடு முழுவதும் இன்று வரையில், ஒருவித பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடள், தீவிர சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நேற்றும், இன்றும் சிலாபம், குளியாப்பிட்டி, குருநாகல் உள்ளிட்ட இடங்களில் அசாதாரண நிலை ஏற்பட்டதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, அசாதாரண நிலையை கட்டுப்படுத்த சட்டத்திற்கு உட்பட்ட வகையில், அதிகப்பட்ச பலத்தை பிரயோகிக்க அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.