நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை..! வடக்கிற்கு இராணுவப் பாதுகாப்பு தேவையா?

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற சூழ்நிலைகளை கருதி, வடக்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டுமா? இல்லையா? என்பதை இராணுவமே தீர்மானிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று பிக்குமார்களை சந்தித்தப் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய மாகாணங்களில் எந்த அளவுக்கு இராணுவம் நிலைகொள்ளச் செய்யப்பட்டுள்ளதோ, அந்த அளவிலேயே வடக்கிலும் பேணப்படுமாக இருந்தால் பிரச்சினையில்லை. அதிகப்படியான இராணுவத்தை அங்கு குவித்து வைத்திருப்பதையே நாங்கள் எதிர்க்கிறோம்.

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற சூழ்நிலைகளை கருதி, வடக்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டுமா? இல்லையா? என்பதை இராணுவமே தீர்மானிக்க வேண்டும். நாங்கள் அவ்வாறான கோரிக்கை எதனையும் முன்வைக்கவில்லை.

இராணுவப்பாதுகாப்பு தேவை என்ற தீர்மானத்தை எங்களால் மேற்கொள்ளவும் முடியாது என்றார்.

இதேவேளை, வடக்கிற்கு இராணுவப் பாதுகாப்பு தேவை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகின. எனினும் தாம் அவ்வாறு கோரவில்லை என்று பின்னர் மாவை சேனாதிராஜா மறுப்பு வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.