ஊரடங்கு சட்டம் நீக்கம் - கம்பஹாவில் மாத்திரம் அமுல் - பாடசாலைகளுக்கு விடுமுறை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் அதிகாலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.

கம்பஹா பொலிஸ் பிரிவில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் 6 மணியளவில் நீக்கப்பட்டுள்ளது.

எனினும் வடமேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மாத்திரம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

இதனால் அந்த பகுதிகளில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வட மேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.