வன்முறையாளர்கள் அடங்க மறுத்தால் சுட்டுத்தள்ளுவோம்! கடற்படை தளபதி எச்சரிக்கை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

நாட்டில் வன்முறையில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த முடியாமல் போனால் கடற்படையினர் முழுமையான அதிகாரத்தை பயன்படுத்த நேரிடும் என கடற்படை எச்சரித்துள்ளது.

வன்முறையில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்துவதற்கு முழுமையான அதிகாரத்தை பயன்படுத்த நேரிடும். சில சந்தர்ப்பங்களில் துப்பாக்கி சூடு நடத்த நேரிடும் என கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா தெரிவித்துள்ளார்.

வன்முறையாளர்களுக்கு எதிராக முழுமையான அதிகாரத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கையை மீறி செயற்பட்டால் காயம் அல்லது உயிர் ஆபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது என கடற்படை தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

வடமேல் மாகாணத்தில் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து காடையர்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 48 மணிநேர மோதல்கள் காரணமாக இதுவரை 3 முஸ்லிம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Latest Offers