தற்கொலை குண்டு தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் வெளிவந்துள்ள செய்தி

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இராணுவத்தினர் பயன்படுத்தாத வெடி பொருட்களே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும்,

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்கள் பல்வேறு இரசயான பொருட்களின் கலவை என தெரிவிக்கப்படுகிறது.

மின்குமிழ்களில் பயன்படுத்தப்படும் பிளமன்ட்களை கொண்டே குண்டுகள் வெடிக்க செய்யப்பட்டுள்ளன.

பொதுவாக பயன்படுத்தப்படும் ரி.என்.ரீ அல்லது ஆர்.டி.எக்ஸ் ஆகிய வெடி பொருட்கள் இந்த குண்டு தாக்குதல்களின் போது பயன்படுத்தப்படவில்லை.

இராணுவத்தினர் பயன்படுத்தும் வெடிபொருட்களும் இந்த தாக்குதல்களின் போது பயன்படுத்தப்படவில்லை என தெரியவருகிறது.

ஐ.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தும் தொழிநுட்பங்களே இந்த குண்டுத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் முற்றுகையிடப்பட்ட பாணந்துறை வீட்டில் வைத்து இரசாயன பொருட்கள் கலந்து குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தொடர்ச்சியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.