மாஹாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க கைது

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

மாஹாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

சற்று முன்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கண்டி - தெல்தெனிய பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட பொலிஸ் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடமேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் இனவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் அமித் வீரசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் கண்டி திகனயில் இடம்பெற்ற இனவன்முறை தாக்குதல்கள் அமித் வீரசிங்கவினால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.