அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர் சட்டக் கல்லூரிக்கு அனுமதி பெற்றவர்!

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

உயிர்த்த ஞாயிறு தினமன்று கொச்சிகடை புனித அந்தோனியோர் தேவாலயத்தின் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய நபர் சட்டக் கல்லூரிக்கு அனுமதி பெற்றுக்கொண்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் தொடர்பில் இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் இன்று விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தது.

விசாரணைகளில் பங்கேற்றிருந்த சந்தேக நபரின் தந்தை இதனைத் தெரிவித்துள்ளார்.

மட்டக்குளியை வதிவிடமாகக் கொண்ட அஹமட் லெப்பே அலவ்தீன் என்ற தற்கொலைதாரியின் தந்தையே இவ்வாறு சாட்சியமளித்துள்ளார்.

22 வயதான தமது புதல்வர் சட்டக் கல்லூரியில் கல்வியைத் தொடர அனுமதி பெற்றுக்கொண்டிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து எதிர்வரும் 23ம் திகதி மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது.