தற்போது மூண்டிருக்கும் நெருப்பை அணைக்க முன்வாருங்கள்...! சபாநாயகர் அழைப்பு

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

நாட்டில் தற்போது மூண்டிருக்கும் நெருப்பை அணைப்பதற்கு அனைவரும் ஒன்றிணையுங்கள் என நாட்டு மக்களிடம் சபாநாயகர் கரு ஜயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையினையடுத்து, பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய,

நாட்டின் எதிர்கால நலனை கருத்திற் கொண்டு மோதல்கள் ஏற்படாதவாறு செயற்படுங்கள். அப்பாவிகளான முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டாம். இதனால் எமது நாட்டிற்கு வரக் கூடிய அவதூறுகளை நினைவில் கொண்டு பொறுமையுடன் செயற்பட வேண்டும்.

நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகள் மற்றும் இவற்றினால் ஏற்பட கூடிய விளைவுகளை கருத்திற் கொண்டு. அரசியல் வாதிகள் பொதுமக்களை அமைதிப்படுத்தும் வகையில் செயற்படுமாறும் , மத்தலைவர்கள் தற்போது மூண்டிருக்கும் நெருப்பை அணைக்க முன்வருங்கள் என்றார்.