பாதுகாப்புப் படையினர் முன்னிலையில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்! அமைச்சர் ரிசாட்

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

பாதுகாப்புப் படையினர் முன்னிலையில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

மினுவான்கொட ஜூம்மா பள்ளிவாசல் மற்றும் ஏனைய கடைத்தொகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது பாதுகாப்புப் படையினர் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவொரு இன சமூகத்திலேனும் கடும்போக்குவாதிகள் இருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமே தவிர, இன முரண்பாடுகளை ஏற்படுத்தி கலகம் விளைவிப்பது எந்தவொரு நபரினதும் பொறுப்பு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை உண்டு எனவும் அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்த வேண்டுமெனவும் அமைச்சர் பதியூதீன் குறிப்பிட்டதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.