மெளலவி உட்பட ஐவர் கொள்ளுபிட்டியில் கைது!

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய, வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலை உரிமையாளர் மொஹம்மட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட்டுக்காக பிரார்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட வந்ததாக சந்தேகிக்கப்படும் மெளலவி உட்பட ஐவரை கொள்ளுபிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று மாலை கொள்ளுபிட்டியில் உள்ள மொஹம்மட் இப்ராஹீம் அன்ஷாப் அஹமட்டின் மனைவியின் வீட்டில் வைத்து அவர்களைக் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய, வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலை உரிமையாளர் மொஹம்மட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட்டுக்காக பிரார்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட சென்றனர் என பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த மெளலவி ஒருவரும் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த மேலும் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

கைதுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது, அவர்களிடமிருந்து முச்சக்கர வண்டியொன்றையும் வீட்டில் இருந்து ட்ரோனர் கமரா ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.