வட மாகாணத்தின் பாதுகாப்பு தொடர்பில் ஆளுநரின் விசேட நடவடிக்கை!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையை கருத்திற் கொண்டு வட மாகாணத்திற்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக மேலும் 14 வாகனங்களை பொலிஸாருக்கு வழங்குவதற்கு வடமாகாண சபை ஆளுநர் சுரேன் ராகவன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

வட மாகாண சபையின் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்கு 2 வாகனங்களில் என்ற கணக்கில் 5 மாவட்டங்களுக்கு 10 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வடக்கின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு வட மாகாண ஆளுநர், பொதுமக்களிடம் கேட்டுள்ளார்.

Latest Offers