கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் சிக்கிய மனித தலை யார்? தாய் வெளிப்படுத்திய தகவல்கள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி தொடர்பில் அவரது தாயார் நேற்று சாட்சியம் வழங்கியுள்ளார்.

இதன்போது அந்தோனியார் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் நடதியவர் அஹமட் முகத் அலாவுதீன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரியின் DNA அறிக்கை நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது தற்கொலைக் குண்டுதாரியின் தயாரான, வகீர் மொஹமட் பல்கீஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

இதன்போது தற்கொலை குண்டுதாரியான மகனை அடையாளம் காட்டினார். தனது குடும்பத்தை, அலாவுதீனும் அவரது குடும்பத்தினருமே கவனித்துக் கொண்டதாக தெரிவித்தார்.

சட்டமருத்துவ அதிகாரி உடற்கூற்றாய்வு அறிக்கையை சமர்ப்பித்ததுடன், பெற்றோரினது மரபணுவுடன், குண்டுதாரியின் மரபணு பொருந்துவதாகவும் அறிக்கையை சமர்ப்பித்தார்.

மட்டக்குளியை சேர்ந்த அஹமட் லெப்பை அலாவுதீன், சட்டக் கல்லுலூரியில் சட்டம் பயிற்றுள்ளார். சாய்ந்தமருதுவைச் சேர்ந்த சபீனா சேனுல் ஆப்தீனை திருமணம் செய்திருந்தார் என்றும் அவரது தந்தையாரும் நீதிமன்றில் சாட்சியம் அளித்தார்.

குண்டுவெடிப்பில் துண்டிக்கப்பட்ட அலாவுதீனின் தலையை தனது மகன் தான் என்று அடையாளம் காட்டியிருந்தார்.

கடந்த 21ம் திகதி தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தனது சகோதரனுக்கு அலாவுதீன் கடிதம் எழுதியுள்ளார்.

தான் திரும்பி வரப் போவதில்லை என்றும் பெற்றோரை கவனமாக பார்த்துக் கொள்ளும் படியும் அதில் குறிப்பிட்டிருந்ததாக அவரது மைத்துனர் சாட்சியம் அளித்துள்ளார்.

Latest Offers