பிணையில் வெளியே வந்தார் புதிய சிங்ஹலே அமைப்பின் தலைவர்

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட டேன் பிரியஷாத் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

புதிய சிங்ஹலே அமைப்பின் தலைவரான டேன் பிரியஷாத் நேற்று வெல்லம்பிட்டியவில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

எனினும், குறித்த நபர் விசாரணையின் பின் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குளியாப்பிட்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.