விசேட தேடுதல்களின் போது தீவிரவாதிகளின் 17 வீடுகளை கண்டுபிடித்த படையினர்

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்திய 17 வீடுகளை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் பொலிஸார் விசேட அதிரடி படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையை முடுக்கி விட்டிருந்தனர்.

இந்த தேடுதல் நடவடிக்கையின் போது பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்த 17 வீடுகளை தாம் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படையினர் மற்றும், பொலிஸாரின் தேடுதல்களின்போது, தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 10 பெண்களும் அடங்குவதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 85 பேரில் 20 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் 55 பேர் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.