வன்முறையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுங்கள்! பிரதமர் பணிப்பு

Report Print Murali Murali in பாதுகாப்பு

வன்முறைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் சட்டத்தின் கீழும், அவசர கால சட்டத்தின் கீழும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இம்மாதம் 12 மற்றும் 13 ஆகிய தினங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் பொலிஸார் மற்றும் முப்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், வன்முறைகளுடன் தொடர்புடைய குழு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.