தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடைய 97 வீதமானோர் கைது!

Report Print Murali Murali in பாதுகாப்பு

கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 97 சதவீதமான நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பதில் பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார். மல்வத்து பீடாதிபதி அஸ்கிரி மகாநாயக்கரை இன்று பிற்பகல் சந்தித்தப் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சிலரே இன்னும் கைதுசெய்யப்படாமல் இருக்கின்றனர். அவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இத்தாக்குதல் சம்பவத்துக்கு உதவியவர்களும் தீவிரவாதிகளாக கருதப்பட்டு கைதுசெய்யப்படுவர் என்றும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் பாதுகாப்பு தரப்பினருக்கு பூரண சுதந்திரம், அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதில் எவ்வித அரசியல் தலையீடுகளும் ஏற்படாது என்று பதில் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.