கொழும்பில் பாரிய தீ விபத்து - 4 வீடுகள் முழுமையாக எரிந்து நாசம்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் 4 வீடுகள் முழுமையாக தீயில் எரிந்து நாசமடைந்துள்ளன.

வத்தளை, மாபோல தூவத்த பிரதேசத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் வீடுகளில் வளர்க்கப்பட்ட 20 ஆடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயிணை கட்டுப்படுத்த கடற்படையினர் மற்றும் தீயணைப்பு குழுவினர் இணைந்து செயற்பட்டுள்ளனர். இதன் காரணமாக தீயை கட்டுப்படுத்த முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பலகையினால் செய்யப்பட் வீடுகள் என்பதனால் வேகமாக தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்சார கசிவு காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.