பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் உட்பட 3 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு, பிணை வழங்க சட்ட மா அதிபர் பரிந்துரை வழங்கியிருந்தார்.

அதற்கமைய ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகிய மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து யாழ். பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.