யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இன்று காலை முதல் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வேண்டுகோளுக்கு அமைவாகவே மேற்படி சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த சோதனை நடவடிக்கைகளை செய்தி அறிக்கையிட சென்ற கிளிநொச்சி பிராந்திய செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு தரப்பால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.