சவால் விடும் அமைச்சர் ரிசாத் பதியுதீன்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

அரசியல் ரீதியாக தனக்கு எதிரான எந்தவொரு செயற்பாட்டினையும் எதிர்கொள்ளத் தயார் என அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ​பொய்யானவை. தன்னுடைய அரசியல் பயணத்துக்கு இடையூறு விளைவிக்க முயலும் எந்தவொரு நடவடிக்கை​யையும் எதிர்கொள்வேன் என அமைச்சர் சவால் விடுத்துள்ளார்.

அமைச்சருக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் இன்று நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் கையளிக்கப்பட்டது.

இது தொடர்பான கருத்து வெளியிடும் போது அமைச்சர் ரிசாத் பதியுதீன் இந்த தகவல்களை வெளியிட்டார்.

ரிசாத்துக்கு எதிராக 64 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்ட நம்பிக்கையில்லாத் பிரேரணை இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.