இலங்கையில் பிரதான அரசியல் கட்சிக்குள் ஊடுருவிய ஐ.எஸ் பயங்கரவாதிகள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் நெருக்கிய தொடர்பினை வைத்திருந்தவர் பிரதான அரசியல் கட்சியை சேர்ந்தவர் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் மொஹமட் ரிஸ்வான் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட்டு வத்தளை - மாபொல நகர சபையின் உறுப்பினராக தெரிவாகி உள்ளார்.

இந்த சந்தேக நபர் நேற்று முன்தினம் வத்தளை - மாபொல பிரதேசத்தில் வைத்து மேல் மாகாண புலனாய்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.