வெளிநாட்டில் சிக்கிய முக்கிய ஐ.எஸ் பயங்கரவாதிகள்! அவசரமாக செல்லும் பொலிஸ் படை

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

சவூதி அரேபியாவில் கைதாகியுள்ள தேசிய தௌஹீத் ஜமாத் உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தும் நோக்கில் புலனாய்வுப் பிரிவினர் அந்நாட்டு விரைந்துள்ளனர்.

சவூதி அரேபிய காவல்துறையினர் இலங்கை தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய நான்கு உறுப்பினர்களை கைது செய்துள்ளனர்.

புலனாய்வு பிரிவினர் சர்வதேச காவல்துறையினரின் ஊடாக வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சவூதி அரேபிய காவல்துறையினர் இந்த நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதான நான்கு பேரில் இரண்டு பேர் தற்கொலைத் தாக்குதல் பயிற்சி பெற்றுக்கொண்ட குறித்த அமைப்பின் முக்கியமான உறுப்பினர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீவிரவாதிகளை இலங்கைக்கு அழைத்து வருவது குறித்து சவூதியுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சவூதி காவல்துறையினரால் கைதான குறித்த சந்தேக நபர்கள் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் மேற்கொள்ள முன்னதாக இவர்கள் சவூதிக்கு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.