ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வலையமைப்பு எவ்வாறு ரகசியமாக செயற்படுகிறது! புலனாய்வு பிரிவு கண்டுபிடிப்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கையிலுள்ள பயங்கரவாதிகள், ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்பை ஏற்படுத்த இணையத்தளம் ஊடாக இணைய கூடிய டெலிகிராம் என்ற செயலியை பயன்படுத்தியதாக புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

ஐ.எஸ் பயங்கரவாதிகள் தங்கள் அமைப்பு தொடர்பில் செய்தி மற்றும் தகவல்களை உலகிற்கு பகிர்வதற்காக இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

சில காலமாக மேற்கொள்ளப்பட்ட கண்கானிப்பின் பின்னர், மிகவும் நுட்பமாக போலி கணக்குகளை ஆரம்பித்த புலனாய்வு பிரிவு அதிகாரிகள், ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தொடர்பு எவ்வாறு டெலிகிராம் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது எனவும், பரிமாறப்படும் தகவல் தொடர்பில் கண்டுபிடித்துள்ளனர்.

டெலிகிராம் செயலி அவ்வளவு பிரபலம் இல்லை எனவும் அதன் மூலம் தகவல் பகிரும் போது இரகசிய தன்மை பாதுகாக்கப்படுகின்றமை இதற்கு காரணமாகும் என புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Latest Offers