முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்! இலங்கை அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளை சர்வதேச அறங்கூறுநர் ஆணைக்குழு கண்டித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின் இலங்கையில் முஸ்லிம் மக்கள் மீது வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

நீர்கொழும்பு, சிலாபம், குருநாகல், கம்பஹா போன்ற இடங்களில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் குறித்த சம்பவங்கள் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சர்வதேச அறங்கூறுநர் ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

அத்துடன் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என்ற செய்தியை இலங்கை அரசாங்கம் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இந்த செயல்களுக்கு காரணம் கூறி தப்பி கொள்ள முடியாது என்று ஆணைக்குழுவின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பெட்ரிக் ரௌஸ்கி தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் சட்டம் என்பவற்றின் கீழ் அரசாங்கம் ஒன்றுக்கு, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்தும் கடமை உள்ளது என்பதையும் சர்வதேச அறங்கூறுநர் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers