மினுவாங்கொடையில் திடீரென ஏற்பட்ட குழப்ப நிலை! பொலிஸார் தலையீடு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கடந்த வாரம் இன வன்முறை ஏற்பட்டிருந்த மினுவாங்கொடயில் இன்று மீண்டும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

மினுவான்கொட நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகளால் இந்த குழப்ப நிலை ஏற்பட்டது.

“இது நகரசபைக்குச் சொந்தமான பூமி, உள்ளே நுழைவது தடை” என மினுவான்கொட நகரசபையால் பதாதைகள் ஒட்டப்பட்டிருந்தன.

நகரசபை தவிசாளர் நீல் ஜயசேகரவின் உத்தரவின் பேரில், இந்த பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் வர்த்தகர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மினுவான்கொடை நகர சபை தவிசாளரைத் தொடர்புகொண்ட பொலிஸார் குறித்த பதாதைகளை அகற்றுமாறு அறிவித்துள்ளனர்.