நுவரெலியாவுக்குள் நுழைந்த மர்ம நபர்! நகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

நுவரெலியாவின் பிரதான பகுதிகளுக்கு தீவிர பொலிஸ் பாதுகாபபு வழங்கப்பட்டுள்ளது.

பிரதான பஸ் தரிப்பிடம், பௌத்த விகாரை, பிரதான தபால் நிலையம், புனித சேவியர் தேவாலாயம் மற்றும் நகர பெரிய பள்ளிவாசல் ஆகியவற்றுக்கு இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா நகரில் இன்று சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர் ஒருவரினால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை முதல் சந்தேகத்துக்கிடமான முறையில் நபர் ஒருவர் நடமாடியுள்ளார். இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மர்ம நபர் பிரபல உணவகமொன்று முன்னால், குளிர்பான போத்தலொன்றுடன் நீண்ட நேரமாக அங்கு நின்றதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர்.

அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமரா மூலம் குறித்த நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இதனையடுத்து நுவரெலியாவின் முக்கிய பகுதிகளுக்கு திடீர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.