இலங்கையர்களை அச்சுறுத்திய கிரீஸ் பூதமாக செயற்பட்டது யார்? அம்பலமானது உண்மை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கையர்களை அச்சுறுத்திய கிரீஸ் பூதத்தின் பின்னணியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளே இருந்தார்கள் என பாதுகாப்பு பிரிவு கண்டுபிடித்துள்ளனர்.

கிரீஸ் பூதம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் புலனாய்வு வேலையை ஆரம்பிக்கும் போதே பயங்கரவாதி சஹ்ரானின் எழுச்சி ஆரம்பமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

புதிய அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது இராணுவத்தின் பயங்கரவாத சோதனை தொடர்பான நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.

புலனாய்வு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டமையினால், ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு அது சாதகமான மாறியுள்ளது. இதன் காரணமாக அவர்கள் செயற்பாடுகள் குறித்து தெரியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புலனாய்வு பிரிவினை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

Latest Offers