இலங்கைக்கு முழு ஆதரவு வழங்க இந்தியா தயார்

Report Print Satha in பாதுகாப்பு

இலங்கை அரசு பயங்கரவாத மிரட்டல்களுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு வழங்க தயார் என இந்தியா தெரிவித்துள்ளது.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் சுமார் 260 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து இலங்கையிலுள்ள இந்திய தூதுவர் தரன்ஜித்சிங் சாந்து கண்டியில் இரு உயர் புத்த துறவிகளை சந்தித்து பேசியிருந்தார்.

இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,

இந்திய தூதுவர் மகாநாயகே தெரோஸ் பாதுகாப்பு நிலை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இலங்கை அரசு பயங்கரவாத மிரட்டல்களுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்க தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers