இலங்கையின் இணையத்தளங்களை ஊடுறுவி சைபர் தாக்குதல் நடத்தியது யார்?

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
760Shares

இலங்கையில் செயற்படும் இணையத்தளங்கள் சிலவற்றின் மீது தமிழ் ஈழம் சைபர் போஸ் என்ற குழுவினால் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

சைபர் தாக்குதலின் பின்னணியில் இந்த குழுவே உள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையிலுள்ள குவைத் தூதரகத்தின் இணையத்தளம் உள்ளிட்ட 13க்கும் அதிகமான இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

lk மற்றும் .com முகவரியுடைய சில இணையத்தளங்கள் மீதும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சைபர் தாக்குதல்களை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளாமையினால் இலகுவாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கைப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.