மினுவாங்கொட இன வன்முறையின் பின்னணியில் செயற்பட்ட அரசியல்வாதி யார்? கைது செய்ய தயாராகும் பொலிஸார்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

அண்மையில் இடம்பெற்ற இன வன்முறைகளின் பின்னணியில் செயற்பட்டவர் எதிர்கட்சியை சேர்ந்த அரசியல்வாதி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 13ம் திகதி மினுவாங்கொட மற்றும் அதனை சூழவுள்ள பல பகுதிகளில் வன்முறை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையின் போது குறித்த அரசியல்வாதிக்கு தொடர்புபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வன்முறையின் சூத்திரதாரியான அரசியல்வாதி மினுவாங்கொட பகுதியை சேர்ந்தவர் அல்ல. குறித்த அரசியல்வாதி கடந்த 9ஆம் திகதி முதல் அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார்.

வன்முறை சம்பவங்களுக்காக மக்களை அவர் ஒன்று கூட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மினுவாங்கொட மோதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் 3 மணித்தியாலங்களுக்கு அதிக நேரம் அந்த அரசியல்வாதி மினுவாங்கொடயில் இருந்துள்ளார். முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கு தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்திற்கும் அவருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முழுமையாக முகத்தை மூடும் வகையில் தலை கவசம் அணிந்து கறுப்பு ஆடை ஒன்றையும் அணிந்து வர்த்தக நிலையங்களுக்கு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த அரசியல்வாதிகளை விரைவில் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.