பயங்கரவாத தாக்குதலுடன் நேரடி தொடர்புள்ள மூவர் கைது!

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

பயங்கரவாத தாக்குதலுடன் நேரடி தொடர்புடைய மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற தாக்குதல்களின் போது நேரடி தொடர்புகளைக் கொண்டிருந்தவர்கள் என்னும் சந்தேகத்தின்பெயரில் இவர்களை இன்று கைது செய்யததாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேக நபர்கள் அம்பாறை மற்றும் கல்முனை பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொர்புடைய பயங்கரவாதிகள் பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு முகாம் குருநாகல் - அலகோலதெனிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கு தெங்கு காணியொன்றில் இவ்வாறு அவர்கள் பயிற்சி முகாமை நடத்தி சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.