பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிலிருந்த நாடாளுமன்ற பணியாளர்? பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள உத்தரவு

Report Print Murali Murali in பாதுகாப்பு

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற பணியாளர் ஒருவரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த நபரை 90 நாள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய பாதுகாப்பு அமைச்சு, குருணாகல் பொலிஸ் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற மொழி பெயர்ப்பாளராக பணியாற்றி வந்த குறித்த நபர் நேற்று குருணாகல் விஷேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் நீண்ட கால உறுப்பினர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சந்தேகநபர் அந்த அமைப்பின் பிரதான அறிவுரையாளர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையிலேயே, குறித்த நபரை 90 நாள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.