தென்னிலங்கையில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி யார்?

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

மாத்தறையில் நேற்று சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் குழுவினர் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

அக்குரெஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த கசுன் சம்பத் என்ற 30 வயதான கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அக்குரெஸ்ஸ, ஊருமுத்த பகுதியில் நேற்று மாலை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

தப்பிச் சென்றவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்வதற்காக 15 விசேட பொலிஸ் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.