கல்வியமைச்சரின் அறிவிப்பு! இலங்கையிலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளிலும்...

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

இலங்கையிலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளிலும் முக்கிய நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளிலும் சிசிரிவி கமராக்களை பொருத்தும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன் பாடசாலைகளில் தவணை பரீட்சைகள் இரத்து செய்யப்பட மாட்டாது என்பதுடன், க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளும் எவ்வித சிக்கலுமின்றி நடைபெறும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தையடுத்து பாடசாலைகள் மூடப்பட்ட கால பகுதியை ஈடு செய்யும் வகையில் ஓகஸ்ட் மாத விடுமுறையை இரத்து செய்வதா என்பது தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.