கொழும்பு பயங்கரவாத தாக்குதல்! வெளிநாடுகளில் பதுங்கியுள்ள தீவிரவாதிகள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தொடர்புடைய சந்தேக நபர்கள் தற்போது சவுதி அரேபியா மற்றும் கட்டாரில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சவுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கை சர்வதேச பொலிஸார் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மொஹமட் மில்ஹான் என்பவரே இலங்கை அழைத்து வரப்படவுள்ளார்.

மக்காவுக்கு சென்றவர் மீண்டும் இலங்கை வராத நிலையில் சவுதி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவர் இலங்கை அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கட்டாரில் உள்ள இருவர் தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களம் கண்காணித்து வருகிறது.

அதற்கமைய குறித்த இருவர் தொடர்பில் தகவல் சேகரிப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.