5 மணிநேரம் அமைச்சர் ரிஷாட்டிடம் தீவிர விசாரணை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

அமைச்சர் ரிசாத் பதியுதீன் நிதி குற்ற விசாரணை பிரிவின் முன்னிலையில் ஆஜராகி உள்ளார்.

2014 -2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரிசி இறக்குமதியில் செய்யப்பட்ட முறைகேடு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக சென்றுள்ளார்.

இரண்டு இலட்சத்து 57 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதியில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைக்கு வாக்குமூலம் ஒன்றை அளிக்க நிதி மோசடிகளை விசாரிக்கும் பொலிஸ் அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.

இன்று காலை 10.00 மணியளவில் ரிசாத் பொலிஸ் நிதி குற்ற விசாரணை திணைக்களத்திற்கு வருகை தந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சரிடம் தற்போது வரையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.