களனி பல்கலையில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்றம்!! விசேட அதிரடிப்படையினர் தீவிர தேடுதல்

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

களனி பல்கலைக்கழகத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்றத்தையடுத்து மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன.

21/4 தாக்குதலையடுத்து நாடு தழுவிய ரீதியில் தேடுதல், சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அத்துடன், விசேட பாதுகாப்பு நடைமுறைகளும் அமுல்படுத்தப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் விசேட அதிரடிப்படையினர் பல்கலைக்கழகத்தில் தீவிர தேடுதலை முன்னெடுக்க முற்பட்ட வேளை மாணவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதனால், நேற்றிரவு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்தே பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது.