போலித் தகவலால் பாடசாலையில் ஏற்பட்ட குழப்ப நிலை! பதறியடித்த பெற்றோர்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

நீர்கொழும்பிலுள்ள பாடசாலை ஒன்றில் பரவிய வதந்தி காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பரவிய வதந்தியினால் பதற்றமடைந்த பெற்றோர் பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களை வீட்டிற்கு அழைத்துள்ளனர்.

அத்துடன் பாடசாலைக்கு அருகில் சென்ற பெற்றோர் பதற்றம் ஏற்படும் வகையில் செய்யப்பட்டுள்ளனர்.

பெற்றோரினால் ஏற்பட்ட பரபரப்பான நிலைமையை அடுத்து நிலைமையை ஆராய நீர்கொழும்பு வலய கல்வி அலுவலக பிரதி இயக்குனவர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பிரதேசத்தில் பரவிய வதந்தியில் எவ்வித உண்மை இல்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

அச்சமடைய வேண்டிய எந்தவொரு நிலைமையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போலி தகவல் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.